Karungali Bracelet Original – Unpolished Natural Finish – No Artificial Colour – Original Wood Colour – Elastic Thread – Suits all hand sizes – 100 % pure beads of Black Ebony Wood.
Karungali Kattai Bracelet – Karungali Malai Bracelet – Karungali Bracelet Bead Size – 8mm, Bracelet Weight : 8 to 9g , Elastic Thread.
கருங்காலி மாலை பயன்கள்: கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து அணிந்து பயன்படுத்துவதால் எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் கிடைக்கும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் திருமண தடைநீங்கி திருமணம் கைகூடும். ஆண் பெண் என இருபாலரும் இந்த கருங்காலி மாலையை அணியலாம். இந்த மாலையை கொண்டு தியானம் செய்யவும், மந்திரங்கள் ஜெபிக்கவும் உபயோகிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம்.
கருங்காலி மாலை அணியும் முறை: கருங்காலி மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம்.
கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்: அனைத்து ராசிக்காரர்களும் அணியலாம், ஆண்கள், பெண்கள் இருபாலரும் அணியலாம். எப்படி பெண்கள் கடவுள் உருவம் பொறித்த தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் போன்றவற்றையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் அணிந்திருப்பது தவறில்லை. சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும். பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை. திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.
பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு: குளிப்பதற்கு ரசாயனங்கள் கொண்ட சோப்பு மற்றும் ஷாம்பு உபயோகிப்பதால் நாம் குளிக்கும் போது கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட், ஸ்படிகம் மாலை, தாமரை மணி மாலை, ருத்திராட்ச மாலை போன்றவற்றை அணியக்கூடாது, கழட்டி வைத்து விட்டு குளித்த பின்னர் அணிந்து கொள்ளவேண்டும். நூலில் கோர்க்கப்பட்டது என்பதால் தூங்கும் போது கழட்டிவிட வேண்டும், வெள்ளி/செப்பு கம்பியில் கோர்த்து கொண்டால் தூங்கும் போதும் அணியலாம்.
கருங்காலி மாலையை எப்போது அணியக்கூடாது? அசைவ உணவு உட்கொள்ளும்போது அணியக்கூடாது, அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம்,
Reviews
There are no reviews yet.